ஆறு எளிமையான அடிகளில் சுவிஸ் நாட்டிற்கு வந்தடையுங்கள்

1. பதிவு செய்தல்

  • சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்த எட்டு நாட்களுக்குள் உங்களின் குடியிருப்பு முகவரியினை பதிவு செய்யவும்
  • நீங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால் தங்கும் அனுமதி மற்றும் தேவைப்பட்டால் பணி செய்ய அனுமதி இவை இரண்டிற்கும் விண்ணப்பம் செய்யுங்கள்

இதற்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடியிருப்பு பதிவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். அனைத்து தகவல்களையும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் விவரங்களையும் இந்த வலைத்தளத்தில் காணலாம்: sem.admin.ch

2. காப்பீடு

  • நீங்கள் குடிபெயர்ந்த மூன்று மாதங்களுக்குள் உங்களுடைய கட்டாய மருத்துவ காப்பீட்டினை வாங்கி விடவும்

3. குடியிருப்பு

இடைத்தரகு ஏஜென்சி அல்லது ஆன்லைனில் வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உள்ள வீடுகளை ஒப்பிடுங்கள். ஒரு வீட்டினை பார்க்கச் செல்லும் பொழுது கீழ்க்கண்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள்:

 

  • உங்கள் தங்கும் அனுமதி அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டையின் நகல்
  • உங்கள் பணி நியமன ஒப்பந்தத்தின் நகல்
  • நீங்கள் கடைசியாகத் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ள தேவையான தகவல்கள்
  • உங்கள் கடன் விவரங்கள் (நீங்கள் குடியிருக்கும் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும்)    

4. வங்கிக்கணக்கு

வங்கிகள் மற்றும் சுவிஸ் நாட்டின் பிற பண நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே பெறலாம்: schweizer-banken.info. உங்கள் வங்கிக்கணக்கினைத் திறக்க கீழ்கண்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்.

 

  • செல்லுபடியாகும் அடையாள அட்டை
  • தங்கும் அனுமதி அல்லது வசிப்பிடத்தை உறுதி செய்யும் சான்றிதழ்
  • பணி நியமன ஒப்பந்தம் (நீங்கள் பணியில் இருக்கிறீர்கள் என்றால்)

5. மோட்டார் வாகனம்

உங்கள் மோட்டார் வாகனத்தை பதிவு செய்ய மற்றும் பிற பணிகளுக்கு உங்களுடைய காண்டோனில் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகவும். அனைத்து முகவரிகள் மற்றும் தகவல்களை நீங்கள் இங்கே காணலாம்: asa.ch

 

  • நாட்டிற்குள் நுழைந்த பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு உங்கள் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் எழுத வேண்டும்
  • குறிப்பிட்ட கெடுவிற்குள் உங்கள் வாகனத்தை மாற்றிப் பதிவு செய்யவும் - புது வாகனம் எனில் ஒரு மாதம், பயன்படுத்தப்பட்ட வாகனம் எனில் 12 மாதங்கள்
  • Sவாகன அனுமதி பெறுவதற்காக ஒரு சுவிஸ் காப்பீடு கழகத்தின் மோட்டார் வாகன காப்பீட்டினை வாங்கவும் (கட்டாயமானது).

6. அஞ்சல் மற்றும் தொலைபேசி தொடர்பு

  • நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு குடி பெயர்வதற்கு முன்னால் உங்களுடைய பழைய அஞ்சல் நிலையத்தில் உங்கள் புதிய முகவரியினை கொடுத்து உங்கள் தபால்களை அங்கு அனுப்புமாறு சொல்லுங்கள்
  • உங்கள் புதிய வீட்டிற்கு ஒரு தொலைபேசி தொடர்பு மற்றும் ஒரு இன்டர்நெட் தொடர்பினையும் விண்ணப்பியுங்கள்
  • சுவிஸ் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி கட்டணம் செலுத்துவதற்கு இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்: serafe.ch

சுங்க வரி விதிமுறைகள்

நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு குடி பெயரும் பொழுது உங்களுடைய வீட்டு பொருட்கள், இதர பொருட்கள், உங்களுடைய வளர்ப்பு மிருகங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை எந்த கட்டணமும் இன்றி கொண்டு வரலாம். இதற்கு ஒரே ஒரு விதிமுறைதான் உண்டு - அதாவது நீங்கள் கொண்டுவரும் பொருட்கள் உங்களால் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும் குடிபெயர்ந்த பின்னரும் அவை உங்களால் பயன்படுத்தப்பட வேண்டும்.