வீட்டு உபயோகப் பொருட்கள் காப்பீடு
உபயோகப் பொருட்கள் காப்பீடு உங்களுடைய உடைமைகள் அனைத்தையும் நெருப்பு அல்லது இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டு அல்லது தண்ணீரினால் ஏற்படக்கூடிய சேதம், கண்ணாடி உடைதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மரப்பொருட்கள், உடைகள், காலணிகள், தொலைக்காட்சி பெட்டி, கணினி, அலைபேசி, உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் ஆகிய அனைத்திற்கும் காப்பீடு அளிக்கப்படும்.
தனிநபர் பொறுப்புக் காப்பீடு
நடைபயிற்சி செல்லும் போது ஜாகிங் செல்பவரை உங்கள் நாய் கடித்து விட்டது அல்லது நீங்கள் வண்டியை பார்க் செய்யும் பொழுது வேறு ஒரு வண்டியின் மீது மோதி விட்டீர்கள். எங்களுடைய தனிநபர் பொறுப்புக் காப்பீடு நீங்கள் ஒரு மூன்றாவது நபரின் உடமை அல்லது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் எனில் உங்களை பண நஷ்டத்தில் இருந்து காப்பாற்றும்.
நீங்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்(Gut zu wissen): தனி நபர் பொறுப்புக் காப்பீடு கட்டாயமான ஒன்று அல்ல. எனினும் நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தீர்கள் எனில் வீட்டின் உரிமையாளர் இந்த காப்பீட்டினை நீங்கள் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மேலும் ஒரு சில காண்டோண்களில் நாய் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தனி பொறுப்புக் காப்பீடு வைத்திருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
கட்டிட காப்பீடு
எங்களுடைய கட்டிட காப்பீடு உங்களுடைய ஒன்று முதல் மூன்று குடியிருப்புகளை கொண்ட தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றிற்கு நெருப்பு மற்றும் இயற்கை சீற்றம், வெள்ளம் அல்லது தண்ணீர் ஆகியவற்றினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் கண்ணாடி உடைதல் போன்றவற்றிற்கு காப்பீடு அளிக்கிறது.
சட்டப் பாதுகாப்பு காப்பீடு
ங்கள் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரருடன் மோதல் அல்லது சாலை விபத்து, உங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்றாலும் கூட மிகவும் நாள்பட்ட, உங்கள் செல்வத்தை கரைக்கக்கூடிய சட்டப் பிரச்சனைகளில் முடியலாம். விசானாவின் சட்டப்பாதுகாப்பு காப்பீடு உங்களுக்கு வக்கீல் அல்லது நீதிமன்ற செலவுகள் மேலும் நிபுணர்களுக்கான செலவுகள் அல்லது வல்லுநர்களின் அறிக்கை செலவுகள் அல்லது தீர்ப்பின்படி செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை ஈடு செய்யும்.
இதைத் தெரிந்து கொள்வது நல்லது: மருத்துவர்களுடன் அல்லது சமூக மற்றும் தனியார் காப்பீடு கழகங்களுடன் உங்களுக்கு எதுவும் வாக்குவாதங்கள் ஏற்பட்டால் விசானாவில் அடிப்படை காப்பீடு வைத்துள்ள அனைவருக்கும் எங்களுடைய உடல்நல சட்டப் பாதுகாப்பு கட்டணமின்றி கிடைக்கும்.
* எங்களுடைய வலைத்தளம் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பிற மொழிகளுக்கு உங்கள் பிரௌசரில் உள்ள மொழிபெயர்ப்பு செயலியினை பயன்படுத்தவும்